உலகம்

டிக் டாக் செயலியை வாங்க டுவிட்டர் நிறுவனம் களத்தில்

(UTV | அமெரிக்கா) – டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யாவிட்டால் 15 நாட்களில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்பட ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட பேச்சு வார்த்தை முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது

எனினும், திடீர் திருப்பமாக டிக் டாக் செயலியை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் போட்டியில் குதித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் டிக் டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி வேறு சில அமெரிக்க நிறுவனங்களும் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிப்பதால் அதன் விலையும் அதிகரித்து வருவதாகவும் மிக விரைவில் டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டுவிட்டர் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related posts

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!