கிசு கிசு

டிக் டாக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்?

(UTV|INDIA) டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரைக்கிளை கூறியதையடுத்து, டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியை, இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், கலாச்சாரம் சீரழிகிறது; பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த இந்த வழக்கில், டிக்டாக் செயலிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மதுரைக்கிளையில் நேற்று நடைபெற்ற விசாரணையிலும், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

அதைதொடர்ந்து, சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் மத்திய அரசு நேற்று பேசியதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து  டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கு ‘இறுதி அஞ்சலி’ என்ற என்ற பெயரில் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

Related posts

பெயரை மாற்றும் ஞானசார தேரர் (புதுபெயர் உள்ளே)

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

பாகிஸ்தான் அணிக்கு தடையா?