உலகம்

டிக்டாக் மீதான தடை நீக்கம்

(UTV | பாகிஸ்தான்) – உலகளவில் மக்களை கவர்ந்துள்ள செயலிகளில் டிக் டாக் முக்கியமான ஒன்று. பாமரர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பயன்படுத்தும் இந்த செயலி சீன நிறுவனத்துக்கு சொந்தமானது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக்கை தடை செய்ய அரசியல் ரீதியான காரணங்கள் இருந்த நிலையில் பாகிஸ்தானில் ஒழுக்கக்கேடு, ஆபாசம் ஆகிய காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

டிக் டாக்கை பெரும்பாலானோர் பொழுதுபோக்காக பயன்படுத்தும் நிலையில் பலர் ஆபாசமான வீடியோக்களை வெளியிடவும் செய்தனர். ஒரே நேரத்தில் பல இலட்சம் பேருக்கு இந்த வீடியோக்கள் செல்வதால் இதை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

பாகிஸ்தானிலும் இந்தப் புகார்கள் எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது டிக் டாக் நிறுவனம் அளித்துள்ள உறுதிமொழி காரணமாக பாகிஸ்தான் அரசு தடையை நீக்கியுள்ளது.

பாகிஸ்தானின் தொலை தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆபாசத்தையும், ஒழுக்க கேட்டையும் மீண்டும் மீண்டும் பரப்பும் கணக்குகளை நீக்குவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு!