அரசியல்உள்நாடு

 “டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு” ……!!

(UTV | கொழும்பு) –  “டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு” ……!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி மனுமீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம். ஏ. ஆர். மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், தீர்ப்புக்காக இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரித்தானியப் பிரஜை [+எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி வரை தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து ராஜாங்க அமைச்சர் டயானா கமகே விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களே பெருமளவில் காணப்படுவதாக நீதித்துறை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

பேரூந்து கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு