உள்நாடு

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

(UTV | கொழும்பு) –  சுற்றுலா துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரதிவாதியான டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு குறித்த நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு