வணிகம்

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

(UDHAYAM, COLOMBO) – ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை திறந்துவைக்கும் வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் இராணுவத்தின் நிதியுதவியின் மூலம் நிறுவப்பட்ட குறித்த தொழிற்சாலை நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த டயர் தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 8800 மேற்பட்ட டயர்களை மீள்உற்பத்தி செய்யும் திறன் உள்ளதுடன் குறித்த நிலையத்தினூடாக நாள் ஒன்றுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான 36 டயர்களை மீள்உற்பத்தி செய்ய முடியும்.

இந்த உற்பத்தி செயற்பாடுகளுக்கு 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 300 படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தொம்பகொட தொழிற்சாலை மற்றும் கொஸ்கம இராணுவ கைத்தொழில் பட்டறை ஆகியன இராணுவ வாகனங்களின் வன்பொருள், பராக் உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் பல்வேறு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவதளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/Army_gets_new_Tyre_.jpg”]

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால்மா விலை குறைப்பு

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு