உலகம்

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொவிட்

(UTVNEWS | JAPAN) – ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொவிட் -19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொவிட்

சீனாவிற்கு சென்று வந்த டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை.

யோகோஹமா துறைமுக பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3 ஆயிரத்து 700 பேரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தற்போது அவர்களில் மேலும் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கப்பலில் இருப்போரில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே நேரிட்ட மிகப்பெரிய பாதிப்பாக இது அறியப்படுகிறது.

குறித்த கப்பலை  பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி வைக்குமாறு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

அழுத்தங்களுக்கு மத்தியில் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு பைடன் பச்சைக் கொடி

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் வலுக்கிறது

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது