உள்நாடு

டயனா தாக்கப்பட்டமை குறித்து நாளை மறுதினம் கூடவுள்ள குழு!

(UTV | கொழும்பு) –

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த குழு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள சிசிரிவி காணொளிகளை மையமாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்திலுள்ள வாசிகசாலைக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]