சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

(UTV NEWS) ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதி மன்றம் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்தார்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனையான எக்னெலிகொட கடத்தல் , காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்தற்காக கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

குசும் பீரிஸ் காலமானார்

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

தடைசெய்யப்பட்ட 106 மீன்பிடி வலைகள் கண்டுபிடிப்பு