சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் தீர்ப்பு இன்று மாலை ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

சந்தியா எக்னெலிகொடவை திட்டி, அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் கடந்த வருடம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஞானசார தேரருக்கு ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 19 ஆம் திகதி மேன்முறையீட்டை தாக்கல் செய்ததோடு, அதன் தீர்ப்பு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது.

எனினும் அது தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் குறித்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படும் என ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி அன்றைய தினம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை