சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பாத யாத்திரை?

(UTV|COLOMBO)-பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்றைய தினம் பாத யாத்திரையொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

பௌத்த பிக்குகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த பாத யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.

களனி ரஜமஹா விஹாரையிலிருந்து கொழும்பு கோட்டே ரயில் நிலையம் வரையில் பாரியளவில் இந்த பாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சிங்கள பௌத்த அமைப்புக்களினால் இந்த பாத யாத்திரைப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கொழும்பு கோட்டேயில் அமைந்துள்ள விஹாரைக்கு எதிரில் சத்தியாக் கிரக போரட்டமும் இன்று நடத்தப்பட உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

கல்வியமைச்சருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது