சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல்

(UTV|COLOMBO)-கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி அவருடைய வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு மனு ஒன்றை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (15) தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மேன்முறையீட்டு மனுவை, அப்பகுயில் அமைந்துள்ள மேல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு, ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று (14) அறிவித்திருந்தது.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்