சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் தேசிய தினமன்று விடுதலை வழங்குவது தொடர்பில் ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் சங்கமானது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதலில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் எனும் அமைப்பும் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பினை மேற்கோள்காட்டி குறித்த அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. அதன்படி, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதனை மீளவும் ஆராயுமாறும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்