சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவருக்கு 1500 ரூபா அபராதமும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதால் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!