சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பொலன்னறுவை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இனவாதத்தினை தூண்டும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று(25) சிறைச்சாலை ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை

editor

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை