உலகம்

ஜோ பைடன் உத்தரவிட்ட முதல் இராணுவ ஒப்புதல்

(UTV | அமெரிக்கா) – சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இம்மாதம் தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமயகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது.

ஈரானிய ஆதரவுடைய போராளி குழுக்களை அழிக்கும் பொருட்டு அமெரிக்கா நேற்று சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காஸா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரித்த மருத்துவர்கள்.

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி