உலகம்

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்ட் டிரம்ப்

(UTV | அமெரிக்கா ) –  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தது. டிரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.

ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பதிவான வாக்குகளில், டிரம்பைவிட பைடன் 59 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை

தொடர்ந்தும் லெபனானில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்