உள்நாடு

ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

(UTV | கொழும்பு) –

விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர் ‘அத தெரண’விடம் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

வெட்டுக்கிளிகள் தொடர்பில் தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இல