உள்நாடுசூடான செய்திகள் 1

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

(UTV | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, விசாரணைக்கு முந்தைய மாநாட்டை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் திகதி  நடத்துவதாக அறிவித்தார்.

சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற 61 பேர் விளக்கமறியலில்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு