சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

(UTV|COLOMBO)-சொத்துக்கள் தொடர்பிலான விவரங்க​ளை சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்