கிசு கிசு

ஜே.ஶ்ரீ ரங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா செலுத்திய பதிவு செய்யப்படாத சிற்றூர்ந்து செட்டிக்குளம் மருத்துவமனைக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இதன்போது அந்த சிற்றூர்ந்தில் பயணித்த காவற்துறை சிப்பாய் பலியானார்.

இந்த விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் இதனையடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் :

கவனயீனம் முறையில் வாகனம் செலுத்தியமை, குற்றத்தை மறைக்க முற்பட்டமை, பொய்யான பீ.அறிக்கை தயாரிக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  அழுத்தம் கொடுத்தமை, நேரடியாக பார்த்த சாட்சிக்கு அழுத்தம் கொடுத்தமை,
குறித்த வாகனத்தை பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்தியாக பொய் கூறியமை போன்ற காரணங்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

‘சாரா’ இறந்துவிட்டாரா? உயிருடனா? – அரசு பாரிய முயற்சி

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம்

உதய கம்மன்பில தொடர்பில் இன்று தீர்மானம்