உலகம்

ஜேர்மன் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குகிறது

(UTV | அமெரிக்கா) – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த க்யூர்வேக் (Cure Vac) எனும் நிறுவனம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நாட்டின் டியுபிங்கன் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி பரிசோதனைக்காக, ஜேர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 144 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறித்த தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னர் அடுத்த வருடம் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கியூபாவின் ராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகல்

தன்சானிய ஜனாதிபதி உயிரிழப்பு

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்