விளையாட்டு

ஜேர்மனியிடம் மண்ணை கவ்விய போர்ச்சுக்கல்

(UTV |  ஜேர்மன்) – ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று(21) போச்சுக்கலை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ஜேர்மன்.

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. நேற்றைய இரண்டாவது மேட்ச் டேவில் க்ரூப் எஃப் அணிகளான போர்ச்சுக்கல் –  ஜேர்மன் இடையே போட்டி நடைபெற்றது.

விருவிருப்பாக தொடங்கிய போட்டியில் முதல் 15வது நிமிடத்திற்கு போர்ச்சுக்கலின் ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்ய ஆட்டம் பரபரப்பாக செல்ல தொடங்கியது. ஜேர்மன் பலமுறை கோல்களுக்கு முயற்சி செய்த நிலையில் இரண்டு முறை போர்ச்சுக்கலினால் ஓவ்ன் கோல் ஜெர்மனிக்கு கிடைத்தது. இதுதவிர ஹாவெர்ட்ஸ், கோசென்ஸ் அடித்த இரு கோல்களையும் சேர்ந்து ஜேர்மன் கோல் கணக்கு நான்காக உயர்ந்தது.

இரண்டு ஓவ்ன் கோல்கல் அளித்து விட்டதால் திணறிய போர்ச்சுக்கல் இறுதியில் 2-4 என்ற கணக்கில் ஜேர்மன் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தரவரிசையில் இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் உள்ளன.

Related posts

மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிக்கொள்ளும் கால்பந்தாட்டப்போட்டி இன்று

இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கட்டுக்களால் வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்