கேளிக்கை

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி காலமானார்…

ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் – நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது. கய்ஹமில்டன் இயக்கினார். இதில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார்.
ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட். இந்த படத்துக்கு பிறகு பெரிய படங்களில் அவர் நடிக்கவில்லை. தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காமல் சினிமாவை விட்டு விலகி விட்டதாக கூறப்பட்டது.
இதன்பிறகு  தொலைக்காட்சி தொடர்களில் டனியா மல்லெட் நடித்து வந்தார். மாடலிங்கிலும் ஈடுபட்டார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த டனியா மல்லெட் மரணம் அடைந்ததாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அவருக்கு வயது 77.

Related posts

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

நயன்தாராவை அம்மா என்று அழைத்தும் வரும் குழந்தை…