உலகம்

ஜெலன்ஸ்கி : 137 ஹீரோக்கள் பலி, 316 பேர் படுகாயம்

(UTV |உக்ரைன்) – ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தரவுக்கு அமைய உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் நேற்று ஆரம்பித்தது.

இந்த தாக்குதலின் முதல் நாளில் இதுவரை 137 மாவீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், “ரஷ்யப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகளின் தாக்குதலில் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் உள்ளடங்காலக உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள இராணுவ அமைச்சின் உளவுப்பிரிவு தலைமையகமும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை 2 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்துள்ளதோடு ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தியுள்ளது.

உலகின் பலம் வாய்த இராணுவ படைகளில் ஒன்றான ரஷ்ய படைகளை எதிர்ப்பது உக்ரைனுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்நிலையிலேயே, நாட்டை பாதுகாக்க அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

Related posts

நெதர்லாந்து – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஈரானின் கொள்கை ஒரே மாதிரிதான்

ஆபிரிக்காவில் மற்றொரு கொடிய வைரஸ் நோய்