உள்நாடு

ஜெரோமின் மனுவை நிராகரிக்குமாறு ஆட்சேபனை முன்வைப்பு!

(UTV | கொழும்பு) –

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

இந்த ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இம்மாதம் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி, ஷமிந்த விக்கிரம இந்த ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக பொலிசாரின் அறிவித்தல்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – முற்தரப்பு ஒப்பந்தம் இன்று