உலகம்

ஜூலை முதல் பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை

(UTV |  தென்கொரியா) – குறைந்தது கொவிட்-19 தடுப்பூசி டோஸ் ஒன்றை பெற்றவர்கள் ஜூலை முதல் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70% பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு தடுப்பூசி போட ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது.

70% க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் முதல் டோஸைப் பெற்றவுடன் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் ஒக்டோபரில் சரிசெய்யப்படும் என்று பிரதமர் கிம் பூ-க்யூம் புதன்கிழமை கூறினார்.

இதேவேளை 60 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களில் 60% க்கும் அதிகமானோர் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் குவான் தியோக்-சியோல் தெரிவித்தார்.

தென் கொரியா நாளை வியாழக்கிழமை முதல் 12,000 க்கும் மேற்பட்ட கிளினிக்குகளில் 65 முதல் 74 வயது வரையிலான பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆர்பிக்கவுள்ளது.

தென் கொரியாவில் செவ்வாயன்று 707 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 137,682 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,940 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Related posts

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு

பாராளுமன்றம் கலைப்பு : 90 நாட்களில் தேர்தல்