உள்நாடு

ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொவிட் 19 பரவலுக்கு மத்தியில், பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்போது, அதன் ஊடாக வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையையை விரைவில் அறிமுகம் செய்யுமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்னார்.

இதேவேளை, இந்த நடைமுறையை ரயில் சேவையிலும் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

பேரூந்துகள் முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி

சீனாவில் இருந்து மேலும் 300 மில்லியன் யுவான் மானியம்