உள்நாடு

ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நாட்டில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் தொகை காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ள தரப்பினருக்கான தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 6.2 மில்லியன் பேருக்கு இதுவரையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்

எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி