உள்நாடு

ஜூன் 21 வரையில் இத்தாலி செல்லத் தடை

(UTV |  இத்தாலி) – இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.

இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

வரலாறு காணும் AstraZeneca : ஒரு இலட்சம் பேருக்கு ஏற்றம்

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு