உலகம்

‘ஜி – 20″ அமைப்பின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடல்

(UTVNEWS| COLOMBO) –‘ஜி – 20″ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் போது கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளன.

‘ஜி – 20″ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,295 நோய் பாதிப்புக்குள்ளவர்களின் எண்ணிக்கை 4,71,420 தாண்டிவிட்டது. பல நாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

Related posts

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு