உள்நாடுசூடான செய்திகள் 1

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) -கடந்த காலங்களில் சில நியாயமான போராட்டங்களில் முன்னின்ற புத்தளம் அரசியலில் ஒரு பேசப்படும் நபராகத் திகழ்ந்த முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் கல்பிட்டி பிரதேச மக்களை இரண்டாம் தரமாகப் பார்ப்பது வேதனைக்குரிய அம்சமாகும் என புத்தள நகர முன்னாள் பிரதி நகர பிதா ஏ.ஓ அலிகான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டு ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

நியாஸ் அவர்களுக்கு பல தடவைகள் அதிகமான வாக்குகளை வழங்கியவர்கள் கற்பிட்டி பிரதேச மக்கள் தான். இன்று வரை தனது வீட்டுக்குப் பக்கத்தில் கற்பிட்டி செல்லும் மக்களுக்கு ஒரு பஸ்தரிப்பு நிலையத்தைக் கூட அமைப்பதற்குச் சக்தியில்லாத சில்லறை அரசியல்வாதி.

தராசுக் கூட்டணியில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அலி சப்றி ரஹீமின் பாராளுமன்ற உரையைக் கண்டித்து ஊடகமாநாடு நடத்தியவர், அவரின் தங்கக் கடத்தலை தாறுமாறாக விமர்சித்தவர், உப்புவயலை ஆட்டையப் போட்டார், அசோக்கா தியேட்டரை அபேஸ் பன்னினார், பஸ்ஸை வெண்ணப்புவைக்கு அனுப்பினார், அனல் மின்நிலையத்தை சூழ உள்ள காணிகளை களவாடுகிறார்கள் அபிவிருத்திக் குழு தலைவர் அசமந்தம் என்றெல்லாம் ஒப்பாரி வைத்து அலி சப்ரிக்கு எதிராக மாலை மாலையாக மூக்கு வியர்க்க கத்தியவருக்கு திடீரென அலி சப்ரி மீது ஒற்றைக் காதல் எப்படி வந்தது?

முன்னால் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் மக்கள் காங்கிரஸில் இணைந்த மறுகணம் தன்னை இவ்வளவு காலமும் மாகாண சபைக்கு அனுப்பிய கற்பிட்டி மக்களை இரண்டாம் தர பிஜையாகவும், புத்தளம் நகர எம்பியை முதலாம் தர நபராகவும் கொச்சைப்படுத்தும் கீழ்சாதி ஜாகிலிய்யத் எண்ணத்தை எப்படி இவர்களால் கக்க முடிகிறது? கண்டியில் இருக்கும் ஹக்கீமால் புத்தளத்தில் அரசியலை செய்ய முடியுமென்றால், முப்பது வருட காலமாக புத்தளம் மக்களோடு சகல விவகாரங்களிலும் பங்கெடுக்கும் றிஷாட் பதியுதீனால் ஏன் அரசியல் செய்ய முடியாது? இருவருமே தேசிய அரசியலில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள்.

அவர்கள் தங்களுடைய கட்சி சார் அரசியலை வேண்டிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தவும், பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் பூரண சுதந்திரம் உண்டு. புத்தளம் வாழ் உள்ளூர் மக்களின் வாக்குகளை மட்டும் நம்பி, இடம்பெயர்ந்த மக்கள், கற்பிட்டி மக்களை சீப்பாகக் கருதி பிரித்தாளும் பேத்தனமான சிந்தனையை கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறோம். கடந்த காலங்களில் இவ்வாறான பிரித்தாளும் சின்னப் பிள்ளைத்தனமான சிந்தனையால் தான் முப்பத்திமூன்று வருடம் பிரிதிநிதித்துவம் இல்லாமல் அடுத்த இனத்து உறுப்பினர்களிடம் பிச்சை எடுத்து தெரியும் நிலை தோன்றியது. யானையிலிருந்து பிரிந்த சஜித் அணியை அங்கீகரிக்க முடியுமென்றால்…

அவர்களின் சின்னத்தில் உங்கள் தலைவர் உட்பட வாக்குக் கேட்க முடியுமென்றால்… ஏனைய கட்சிகளை உருவாக்கி தலைமை தாங்கி வழி நடாத்த முடியும். சகோதரர் நியாஸ் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தால் தூரத்துத் தண்ணீருக்காக தொண்டைய காயப்போடாமல் பக்கத்து கிணற்றில் தண்ணீர் அருந்தி தாகம் போக்குவோம். உங்கள் சப்தங்களை அவசரமாக செவிமடுக்கும் எங்கள் மக்கள் காங்கிரஸோடு சேர்ந்து பயணிப்போம். புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம். என அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

8ஆம் திகதி அரசு கவிழுமா?

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று