உலகம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் [VIDEO]

(UTV|DELHI) – டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(05) திடீரென புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இதனை கண்டித்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.

நேற்று(05) மாலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 50 இற்கும் மேற்பட்ட தாக்குதல்காரர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிக அளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“அமெரிக்காவில் கொவிட் -19 தொற்றுநோய் முடிந்துவிட்டது” – ஜோ பைடன்

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்