(UTV| கொழும்பு)- பிரபல நாடக கலைஞர் மற்றும் நடிகர் ஜயலத் மனோரத்ன தனது 71 ஆவது வயதில் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த அவர், இன்று(12) அதிகாலை பொரலஸ்கமுவவிலுள்ள தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சினிமா, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்த அவர், நகைச்சுவை கதாபாத்திங்கள் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளதோடு, ஜனாதிபதி விருது, அரச சாகித்திய விருது, நாடக விருதுகள் உள்ளிட்ட பல்வேறு அரச விருதுகளை பெற்றுள்ளார்.