வகைப்படுத்தப்படாத

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படைவீர்ரகள் சுற்றி வளைத்தனர்.

இதன்காரணமாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. இதில், பாதுகாப்பு படை வீரர் பலியாகியுள்ளார் எனினும், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

300Kg எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் இந்தியாவினையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

 

Related posts

இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

Special Trial-at-Bar appointed to hear Welikada riot case

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்