உள்நாடு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ இலங்கைக்கு விஜயம்!

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 4 – 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்