வகைப்படுத்தப்படாத

ஜப்பான் புதிய மன்னருடன் அமெரிக்கா ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் இன்று விரிவாக விவாதிக்கவுள்ளார்.

அதற்கிடையில், கடந்த முதல் திகதி  ஜப்பானின் புதிய மன்னராக பதவியேற்ற நாருஹிட்டோவை டொனால்ட் டிரம்ப் இன்று சந்தித்தார். மன்னரின் அரண்மனையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்படி அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க மன்னரும் ராணி மசாக்கோவும் டிரம்ப்பை கை குலுக்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜப்பான் அரசின் பிரசித்திபெற்ற அகாசாகா அரண்மனையில் இன்று பகல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் டிரம்ப் மன்னர் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின் மூலம் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

காலநிலை

தூக்கில் தொங்கிய மூன்று பிள்ளைகளும் கொலையா? – [Photos]

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது