உலகம்

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா

(UTV | ஜப்பான்) – ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின்புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த 14ம் திகதி இடம்பெற்றிருந்தது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், யோஷிஹைட் சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் இன்று பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், யோஷிஹைட் சுகா ஓர் ஆண்டுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவார்.

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்சோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – ரேச்சல் ரீவ்ஸ்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை