சூடான செய்திகள் 1

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO) ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கு வழிவக்கும் உடன்படிக்கையில் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த உடன்படிக்கையில் டிஜிட்டல் தொழில் நுட்ப அடிப்படை வசதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் ஜப்பானின் நீதி, தொழில், சுகாதாரத் துறை அமைச்சரும் இவங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 அளவில் இந்த உடன்படிக்கையில் சைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கை பத்து வருடங்களுக்கு அமுலில் இருக்கும். தாதியர் கட்டடங்களை பராமரித்தல், இயந்திர தொழிற்றுறை, இலத்திரனியல் துறை, தொடர்பாடல் துறை, கட்டுமாணம், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு, மின்னணுத்துறை, கப்பற்றுறை, விமானத்துறை, விவசாயம், மீன்பிடித்துறை, உணவுப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

9 நாடுகளுக்கு ஜப்பான் இந்த தொழில்வாய்ப்பை வழங்கவுள்ளது. இதில் 7ஆம் இடத்தில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்