வணிகம்

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜப்பானில் இடம் பெறவுள்ள IT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வாரத்தில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சி கூடமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப 10 நிறுவனங்கள் தமது மென்பொருள் தயாரிப்பு உபகரணங்களை தாம் காட்சிப்படுத்தவும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தொடர்பாகவும் இங்கு முன்னெடுக்கப்படுகின்றது.

ஜப்பான் டொக்கியோவில் நடைபெறவுள்ள IT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

East Hall, E 07- 18 Booth என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் சர்வதேச ரீதியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் முன்னிலையிலுள்ள பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கை வருடந்தோறும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையின் மூலம் மேற்கொண்டு வரும் ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றது.

 

கடந்த வருடம் ஏற்றுமதி மூலமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தது.

2022 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதுடன், இந்த துறையின் மூலம் 200 லட்சம் பேருக்கு நேரடி தொழில் வாய்ப்பு வழங்க எதிர்பார்த்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கைக்கடிகாரம்

ரயில் மற்றும் பேரூந்துகளின் வருமானத்தில் வீழ்ச்சி

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்