வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி

(UTV|JAPAN)-ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகஸ்டு மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் நிறைய தண்ணீர் பருகுமாறும், குளுகுளு வசதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய ஒருவருடன் எட்டு பேர் கைது

உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம்

அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்