அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து. ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏழு பெண் சந்தேகநபர்களும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்