சூடான செய்திகள் 1

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE) 

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————(UPDATE)

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறைவுசெய்ய இன்னும் கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும், அதற்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 1343 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது