உள்நாடு

ஜனாதிபதி ரணில் பொய் சொல்கிறார்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி பொய் கூறுகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஏகமனதாக வாக்களிக்கத் தீர்மானித்தது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை” என அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஜனாதிபதியை சந்தித்த போது இந்த விடயம் மற்றும் இதேபோன்ற பல முயற்சிகள் பற்றி ஜனாதிபதியிடம் கூறினோம். இதை நிறுத்துமாறு அவரிடம் கேட்டோம். அவர் ஒப்புக்கொண்டார். அவர் தனது வார்த்தையை காப்பாற்றுகிறாரா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்,” என்று பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

Related posts

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

editor

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor