உள்நாடு

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி நுவன் போப்பகே நீதிமன்றில் ஆஜர்

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூரப்படும் குற்றச்சாட்டில் 59 ஆவது சந்தேக நபராக கருதப்படும் சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகே இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜராகினார்.

குறித்த வழக்கானது கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது சட்டத்தரணி நுவன் போப்பகே சந்தேக நபராக அடையாளமிடப்பட்டார். இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 71 பேரை அடையாளம் சந்தேக நபர்களாக பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டனர்.

இதன் போது விசாரணை அதிகாரிகள் 59 ஆவது சந்தேக நபராக சட்டத்தரணி நுவன் போப்பகேயை பெயரிடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கு முன்னர் இவ்விவகாரத்தில் 58 பேர் கைதுச் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நுவன் போப்பகே நீதிமன்றில் சரணடைந்த போது அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் பெருமளவு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகினர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதிவான் திலின கமகே, சட்டத்தரணி நுவன் போப்பகேயை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்துள்ளார் . அத்துடன் எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் சென்று வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை