வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்கை யொப்பங்களை போலியாக பயன்படுத்தி திஸ்ஸ அத்தநாயக போலி உடன்படிக்கையை தயாரித்தாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடமைகள் காரணமாக முன்னிலையாக முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த வழக்கின் மேலும் ஒரு சாட்சியாளரான கபீர் ஹாசீம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

EU Counter-Terrorism Coordinator here

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

සිකුරාදා දින දුම්රිය වර්ජන තීරණය වෙනස් වෙයි.