வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று பாகிஸ்தான் செல்கிறார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் அழைப்பின் பேரில், அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருக்க உள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷாஹிட் காகன் அப்பாசி ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இளைஞர் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் வெளிநாட்டுச் சேவை கல்வியகம், இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவகம் மற்றும் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகளுக்கான நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

அத்துடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்திற்கான நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் பொதுக் கொள்கைக்கான தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கிடையிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றக உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது விஜயத்தின் போது இஸ்லாமாபாத்தில் உள்ள  இராஜதந்திர வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

Boeing warns it may stop 737 Max production

பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானத்தில் பயணித்த 8 பேர் மீட்கப்பட்டனர்