உள்நாடு

“ஜனாதிபதி பதவியில் இருந்தால் நாடு நாசம்” – முஜிபுர்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்தால் நாடு மேலும் பாதாளத்தில் தள்ளப்படும் என தெரிவித்தார்.

“… இந்தளவு பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணம் தவறான தீர்மானங்களே. தற்போது கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு தொடர்ந்தும் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. இதனால் தான் இந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி #GotaGoHome என கோஷமிடுகின்றனர். வேறு எதற்கு இவ்வாறு கூறுகிறார்கள்.. மழையில் நனைந்து இந்நாட்டு குடிமகன்கள் இளைஞர் யுவதிகள், இளம் சமுதாயத்தினர் என்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அணிதிரண்டு கோஷமிட்டு இரவு பகல் என்று பாராது கடும் மழையில் நனைந்து ஆர்ப்பாட்டம் செய்வது எதற்கு? அவர்கள் கூறுகிறார்கள் #GotaGoHome..”

Related posts

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்