அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,945 முறைப்பாடுகள் பதிவு.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை) 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,515 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 3,289 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 33 முறைப்பாடுகளும் 107 ஏனைய விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும் – சஜித்

editor

ஹோமாகமவில் இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் [PHOTOS]