அரசியல்

ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.

ஜூலை மாதம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்பாடு செய்துள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் என்பனவற்றுக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தடையேதும் கிடையாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சட்டவிரோத நியமனங்களை இடைநிறுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

பொதுத் தேர்தல் தொடர்பில் 2,999 முறைப்பாடுகள் பதிவு

editor

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor